கண்ணியத்தின் காவலனே நீ வாழி கண்ணிமை நீ எனக்காணம் விழிகள் போற்றிடும் தேவனே நீ வாழி எங்கள் நிலம் எங்கள் வளம் எங்கள் தமிழ்க்குலம் காக்க வந்த சாமி நீ
நீ வாழ்க வாழ்கவென தேவார திருவாசகம் பாடுதற்கு நாயன்மார்கள் இன்றில்லை இவ்விடம் தமிழினக் கேந்திரங்களை காவல்கொள்ளும் காத்தவராயர்களே காவலராய் உண்டு உன்னிடம்
வங்கக் கடலும் வந்து வணங்கும் வல்வையிலே உதித்தவன் நீ வீரம் மிக்க விளை நிலத்தின் தாயுமானவனும் நீ பிறந்தான் தலைவன் பிறந்தான் தமிழ் மக்களுக்காகப் பிறந்தான் வாழ்ந்தான் தலைவன் வாழ்ந்தான் தமிழ் மக்களின் விடியலுக்காக வாழ்ந்தான்
இருப்பான் தலைவன் இருப்பான் தமிழ் மக்களின் இதயத்தில் இருப்பான் வருவான் தலைவன் வருவான் தமிழ் மக்களின் இன்னலைப் போக்க வருவான்
மறவர் தலைவனின் 55வது அகவை இது மறக்குமா! தலைவனின் பிறந்த நாளை தமிழினம் மறக்குமா! எங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே!
|
No comments:
Post a Comment