Friday, November 27, 2009

எங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே!

எங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே!

கண்ணியத்தின் காவலனே நீ வாழி
கண்ணிமை நீ எனக்காணம் விழிகள்
போற்றிடும் தேவனே நீ வாழி
எங்கள் நிலம் எங்கள் வளம் எங்கள் தமிழ்க்குலம்
காக்க வந்த சாமி நீ

நீ வாழ்க வாழ்கவென தேவார திருவாசகம் பாடுதற்கு
நாயன்மார்கள் இன்றில்லை இவ்விடம்
தமிழினக் கேந்திரங்களை காவல்கொள்ளும்
காத்தவராயர்களே காவலராய் உண்டு உன்னிடம்

வங்கக் கடலும் வந்து வணங்கும் வல்வையிலே உதித்தவன் நீ
வீரம் மிக்க விளை நிலத்தின் தாயுமானவனும் நீ

பிறந்தான் தலைவன் பிறந்தான்
தமிழ் மக்களுக்காகப் பிறந்தான்
வாழ்ந்தான் தலைவன் வாழ்ந்தான்
தமிழ் மக்களின் விடியலுக்காக வாழ்ந்தான்

இருப்பான் தலைவன் இருப்பான்
தமிழ் மக்களின் இதயத்தில் இருப்பான்
வருவான் தலைவன் வருவான்
தமிழ் மக்களின் இன்னலைப் போக்க வருவான்

மறவர் தலைவனின் 55வது அகவை இது
மறக்குமா! தலைவனின் பிறந்த நாளை தமிழினம் மறக்குமா!
எங்கள் தலைவன் பல்லாண்டு நலமுடன் வாழ்கவே!

தந்தைபெரியார்

தந்தைபெரியார்தோற்றம் - 17-9-1879
மறைவு-24-12-1973


ஈ.வெ. ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், ஈ.வெ.ரா ஈ.வெ. ராமசாமி நாயக்கர், பெரியார் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாக கருதப்படும் திராவிடர் கழக்கத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாக்க் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம விழுமியத்தை கடைப்பிடிக்கும் பார்பனியம், பெண்களைத்தாழ்வாக கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். கடவுள் நம்பிக்கை, சமயம் என்பவை மூடநம்பிக்கைகளை வளர்ப்பதாக்க் கருதிய ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இவருடைய விழுமியங்களும், கொள்களைகளும், தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும் (சுயமரியாதை இயக்கம், நாத்திகம்), அரசியல் பரப்பிலும் (திராவிடர் கழகம்) ஆழ்ந்த சலனங்களும், தாக்கங்களும் ஏற்படுத்தியவை.

வாழ்க்கை வரலாறு

 • 1879: செப்டம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர், சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
 • 1885:திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
 • 1891:பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
 • 1892:வாணிபத்தில் ஈடுபட்டார்
 • 1898:நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
 • 1902:கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
 • 1904:ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார்.(அக் குழந்தை ஐந்தாம் மாத்த்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை)
 • 1907:பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் க்க்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப் பணியாற்றினார்.
 • 1909:எதிர்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
 • 1911:தந்தையார் மறைவு
 • 1917:ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்.

அரசியல்

தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள். அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் நாட்டிற்காகவே என்று எண்ணிப் பணியாற்றியவர். ஈ.வெ.ரா சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதி சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

ஈரோடு நகர்மன்றத் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பதவிகளை வகித்தவர். ‘குடியரசு’ ‘ரிவோல்ட்’ ‘புரட்சி’ ‘பகுத்தறிவு’ ‘விடுதலை’ ஆகிய இதழ்களை தோற்றுவித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர். இந்தி எதிர்ப்பு, இன உணர்வு, பெண் கல்வி என இயக்கத்தின் கொள்கைக்காகவே வாழ்ந்து வரலாறானவர். வெளிநாட்டுப் பயணங்கள் பல மேற்கொண்டவர். கொண்ட கொள்கைக்காக பலமுறை சிறை சென்றவர். வைக்கம் வீர்ர். ஈரோட்டுச் சிங்களம், தன்மானத் தலைவர், பெரியார் என பல புகழ் மாலைகள் இவரைச் சேர்ந்து பெருமைப்பட்டன.


பொதுவுடமை

“ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது”
“பள்ளிக் கணக்கு புள்ளிக்கு உதவாது”

என்றெல்லாம் முன்னோர்கள் மொழிவார்கள். கரைக்காய் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்றால் முதலில் விதை போட வேண்டும். விதை முளைத்து செடியாக வேண்டும். பிறகு அச்செடி படர்வதற்கு வகை செய்ய வேண்டும். தண்ணீர் ஊற்ற வேண்டும். செழிப்பாகக் காய்ப்பதற்கு எரு இட வேண்டும். பூச்சிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.

இப்டியெல்லாம் பாடுபட்டால்தான் சுரைக்காய் கிடைக்கும். அதனால்தான் “ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது” என்றார்கள். அதாவது அனுபவம்தான் சிறந்த படிப்பு ஆகும்.

பெரியார் அவர்கள் காசிக்குச் சென்று திரும்பியதால் பல அனுபவங்களைப் பெற்றார். பசித்துன்பத்தை அனுபவித்திருக்கிறார் பல குணங்கள் கொண்ட மனிதர்களுடன் பழகியிருக்கிறார். கோவில்களிலும் மடங்களிலும் நடக்கும் முறைகேடுகளை நேரடியாகவே கண்டு மனம் வெதும்பியிருக்கிறார். காசு, பணத்தின் அருமையையும் உணர்ந்திருக்கிறார்.

அனுபவமே சிறந்த ஆசான். அதனைக் தன் பயணத்தின் போது அறந்தார் பெரியார். பணக்காரன் - ஏழை, உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்றெல்லாம் மக்களிதையே ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதை அவர் அறிந்தார். சமூகச் சீர்திருத்தம்பற்றி அவரது உள்ளத்தில் சிந்தனைகள் தோன்றலாயிற்று.

காசியிலிருந்து மனச்சோர்வுடன்தான் ஊர் திரும்பியிருந்தார். மகனுக்குப் பொறுப்பு வரவேண்டும் என்று தந்தை விரும்பினார். உடனே அவர் தன் பெயரிலிருந்த நிறுவனத்தை பெரியார் பெயருக்கு மாற்றினார்.

“ஈ.வெ. ராமசாமி நாயக்கர் மண்டி” என்று பெயரிடப்பட்டது. பெரியார் பொறுப்பேற்று வணிகத்தை கவனித்து வந்தார். அப்போது அவருக்கு வயது இருபத்திஏழு.

வணிகத்தில் ஈடுபட்ட அதைசமயம் உடன் இருப்பவர்களுக்கு உதவிகள் செய்து வந்தார். பெரியாருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்களில் கிறிஸ்தவர், முஸ்லீம் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களும் இருந்தனர். எல்லோரிடமும் அன்பாய் பழகுவார். எல்லோரையும் சமமாக எண்ணுவார். அவர்கள் வீட்டில் நடைபெறும் விழாக்களில் தவறாது கலந்துகொள்வார்.

வியாபாரத்தில் யாருக்கேனும் சிக்கல் எழுந்தால் பெரியார் அதைத் தனது பேச்சுத்திறமையால் தீர்த்து வைப்பார். குடும்பத்தில் சொத்துத் தகராறுளைக்கூட தீர்த்து வைப்பார்.

எல்லாம் தெரிந்தவராக, எல்லோருக்கும் நல்லவராக பெரியார் திகழ்ந்தார்.

தொண்டு செய்வது பெரியாரின் இரத்தத்தில் ஊறிய பண்பாடு ஆயிற்று.

ஒருமுறை ஈரோடு நகரில் ‘பிளேக் நோய்’ பரவிற்று; பிளேக் ஒரு கொடுமையான தொற்றுநோய், அப்பொழுதெல்லாம் இன்றைக்கு இருப்பதுபோல் நவீன மருத்துவவசதி கிடையாது. ஊரில், ‘பிளேக் நோய்’ என்று கேள்விப்பட்டவுடன் பலர் ஊரைவிட்டே ஓடிவிட்டார்கள்! அவ்வளவு பயம்.

ஆனால், பெரியார் துணிவுடன் பிளேக் நோயால் அவதிப்பட்ட நோயாளிகளுக்கு ஓடி ஓடி உதவி செய்தார். அவருடன் அவரது தோழர்களும் சென்று உதவினார்கள். ஏழைகளின் குடிசைகளுக்குச் சென்றார். அவர்களைக் காப்பாற்றிட கடும் பணியாற்றினார். நோய்க் கொடுமையால் பலர் இறந்து போனார்கள். அப்படி இறந்து போனவர்களை பெரியாரே இடுகாட்டிற்கு எடுத்துச் சென்றார்.

வட இந்தியாவில் ‘பிளேக் நோய்’ தாக்கியபோது ஓடிச் சென்று உதவியவர் இரும்பு மனிதர் வல்லபாய்ப்படேல். அதேபோல் தமிழ்நாட்டில் ஒரு இரும்பு மனிதராய்த் தொண்டாற்றினார் தந்தை பெரியார்.

பெரியாரின் தொண்டு ஈரோடு முழுவதும் போற்றப்பட்டது. பல அரசு அதிகாரிகளும், அறஞர்களும் பெரியாரின் நண்பர் ஆனார்கள்.

தமிழறிஞர் பா.வெ. மாணிக்க நாயக்கர் பெரியாரின் பேச்சுத்திறனால் ஈர்க்கப்பட்டவர். பெரியாரின் நெருங்கிய நண்பர் ஆனார்.

புலவர் மருதையா பிள்ளை என்பவர் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர். அவரும பெரியாரின் சமூகச் சீர்த்திருத்தக் கொள்கைகளுக்கு ஆதரவு அளித்தார்.

கைவல்ய சாமியார் பெரியாரின் நட்பு தமிழகமே அறியும்.

பெரியார் நேர்மையானவர். உண்னையானவர். அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவர். இக்காரணங்களால் ஈரோட்டு மக்கள் இவரிடம் மதிப்பும் மரியாதையும் காட்டினார்கள்.

ஊரில் உள்ள பல கோவில்களில் இவரது சேவையால் நிர்வாகம் ஒழுங்காக நடந்தப்பட்டது. அரசுக்கு சொந்தமான கோயில்களிலும் பெரியார் தொண்டாற்றியுள்ளார். கோயில் உற்சவங்களை பெரியாரே முன்நின்று நடத்தியுள்ளார்.

திருவிழாக்கள் வீண் செலவு என்ற கொள்கை உடையவர்தான் பெரியார் என்றாலும், பொறுப்பு ஏற்றுக்கொண்டதால் திருவிழாக்களையும் செவ்வனே செய்து முடித்தார்.

கோயல் திருப்பணிகளை அவரே ஏற்று செய்து முடித்துள்ளார். பழுதடைந்த கோயில்களை புதுப்பித்துள்ளார். பல கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்திப் பெருமை சேர்த்துள்ளார். கோயில் சொத்துக்கள் கொள்ளை போகாமல் பாதுகாத்தார்.

கோயில்களில் நம்பிக்கை இல்லாதவர்தான் பெரியார். ஆனால், கொடுத்துள்ள பணியினைக் குறைவுபடாமல் செய்து முடிக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கடைபிடித்தவர்.

“எப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாத காரியத்தை ஏற்றுக் கொண்டாலும் நாணயமாகவும் அதிக்க் கவனமாகவும் செய்து வருவேன்” என்று அவரே கூறுவார்.

கோயில் சொத்தைக் கொள்ளை கொள்ளவும் தம் நலனுக்குப் பயன்படுத்தவும் முன்வருவோர்தாம் ஏராளம். அப்படியின்றி கோயில் சொத்து கொள்ளை போகாமல் காத்தவர் பெரியார். ஆம் அவர்தான் பெரியார்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைவிட கடவுள் நம்பிக்கைக் கடுகளவும் இல்லாத பெரியார்தான் கோயில் காரியங்களைப் பழுது இன்றி செய்தார்.

பெரியார் தேவஸ்தான கமிட்டித் தலைவராக இருந்த போதுதான் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தைக் காட்டினார். பெரியார் தலைவராகப் பொறுப்பேற்றபோது தேவஸ்தானம் கடனில் மூழ்கித் தத்தளித்தது. அவர் தனது நேரிய நடவடிக்கைகளால் முதலில் கடனையெல்லாம் அடைத்தார். பிறகு பல ஆண்டுகள் அவரே தலைவராய் வீற்றிருந்தார். அவர் பதவி விலகும் போது சுமார் 45,000 ரூபாய்வரை சேமித்துக் காட்டினார். இதிலிருந்து நாம் அவரின் சேவை மனப்பான்மையை அறியலாம்.

“எடுத்த காரியம் யாவினும் வெற்றி” என்பது பெரியார் வாழ்வில் உண்மையாயிற்று.

ஈரோடு நகரவைப் பாதுகாப்புத் தலைவராகப் பெரியார் பணியாற்றியுள்ளார். அதே சமயம் சேலம் நகரவைத் தலைவராக ராஜாஜி அவர்கள் பணியாற்றினார்.

ஈரோடு நகராட்சியின் பணிகள் ராஜாஜியைப் பெரிதும் கவர்ந்தன. குறிப்பாக சுத்தம், சுகாதாரம் ஈரோட்டில் சிறப்பாக இருந்தது.

“உங்கள் சுகாதார அதிகாரிகளை எங்கள் சேலம் நகருக்கு அனுப்பிவேயுங்கள். அவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு எங்கள் நகரையும் தூய்மையாக வைத்துக்கொள்கிறோம்”. என்று ராஜாஜி அவர்களே வியந்து பாராட்டியுள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் 1919 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கம் (Non-Co-Operation Movement) நடைபெற்றது. அப்பொழுது பெரியார் நகரவைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதுமட்டுமல்ல, ஆங்கில அரயாங்கம் “ராவ்பகதூர்” பட்டம் வழங்க முன்வந்தது. அந்தப் பட்டத்தையும் அவர் பெற மறுத்துவிட்டார்.

பட்டங்களையும் பதவிகளையும் பாத தூசியாக பாவித்தவர் பெரியார். அவர்தான் பெரியார்; அவரே பெரியார்.

கௌரவ நீதிபதியாகவும், பன்னிரண்டு ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

பெரியார் ஈரோடு நகரவைத் தலைவராக இருந்தபோதுதான் ஈரோடு நகருக்கு காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டது. பெரியாரின் உழைப்பே அதற்குக் காரணம்.

சாலைகளை அகலப்படுத்தினார். போக்குவரத்து நெரிசலை சரிப்படுத்தினார். ஊர் மக்கள் அனைவருமே பெரியாரைப் பெரிதும் பாராட்டினார்கள். சாலைகளை அகலப்படுத்துவதற்காக சாலை ஓரங்களில் இருந்த கடைகளை இடித்துத் தள்ளவேண்டிய நிலை.

கடைக்காரர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதில் பலர் பெரியாரின் நண்பர்கள்; உறவினர்கள். பெரியார் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவேயில்லை.

“பசிநோக்கர்-கண் துஞ்சார்-எவ்வெவர் தீமையும் மேற் கொள்ளார்” என்ற செய்யுளுக்கு இலக்கணமாய் அவர் சேவை புரிந்தார்.

பெரியாரின் பரந்தமனம் போலவே சாலைகளும் அகலமாக்கப்பட்டன. பெரியார் அவர்களின் துணிச்சல், அஞ்சாமை பாராட்டப்பட்டன. பெரியார் அவர்கள் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் என்றும் பாதிக்கப்பட்டதே கிடையாது. மனக்கட்டுப்பாடு உடையவர். அதனால்தான் அவரால் அளப்பரிய சாதனைகளை நிகழ்த்த முடிந்தது.

பெரியாரின் தந்தையார் வெங்கட்ட நாயக்கர் 1911இல் காலமானார். தந்தையாரின் விருப்பப்படி அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்திலேயே அடக்கம் செய்யப்பட்டார். அங்கே ஒரு சமாதியும் எழுப்பப்பட்டது.

பெரியாரின் தந்தையார் மிகச்சிறந்த கொடையாளி. அவர் வீட்டில் எப்போதும் விருந்து நடந்தவண்ணம் இருக்கும். இதனை நாம் முன்னரேப் பார்த்தோம். அதேபோல் அவர் மறைவுக்குப்பின் “டிரஸ்ட்” ஒன்று நிறுவப்பட்டது. அவரது சொத்துக்களில் பெரும் பங்கு அந்த டிரஸ்ட்டுக்கே எழுதி வைக்கப்பட்டது. பெரியாரின் அண்ணன் ஈ.வெ. கிருஷ்ணசாமி இதற்கு சம்மதிக்கவில்லை. ஆனால், பெரியார் அவர்கள் தந்தையின் விருப்பத்திற்கு குறுக்கே நிற்கவில்லை. எனவே முழு சம்மதம் தந்தார். பொன் பொருளுக்கு ஆசைப்படாத பொன்னானவர் பெரியார்.

ராஜாஜி, பெரியார் நட்பும் இந்தக் காலத்தில் வளர்ந்தது.

காந்தியடிகளின் வேண்டுகோளின்படி 1920இல் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றது. காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கை, தீண்டாமை ஒழிப்பு போன்ற கொள்கைகள் பெரியாருக்கு மிகவும் பிடித்திருந்தது. எனவே காங்கிரஸ் கட்சியில் பெரியார் சேர்ந்தார். ஒத்துழையாமை இயக்கம் வெற்றி பெற தீவிரமாக பிரசாரம் செய்தார். காங்கிரஸின் முழுநேரத் தொண்டனாகவே தன்னை ஆக்கிக்கொண்டார். தான் வகித்து வந்த எல்லா பதவிகளையும் விட்டு விலகினார். அதுமட்டிமல்ல, நீண்டகாலமாக பெயர்பெற்று விளங்கி வந்த வணிக நிறுவனத்தை மூடிவிட்டார். பஞ்சாலை ஒன்று இருந்தது. அதையும் நிறுத்திவிட்டார்.

பெரியாரின் சிந்தனை…. செயல் எல்லாமே காங்கிரஸ்…. காங்கிரஸ் என்றாயிற்று. காங்கிரஸ் பேரியக்கக் கொள்கைகளுக்காக ஊர் ஊராக சென்று உற்சாகமாக்க் குரல் கொடுத்தார்.

பெரியார், ராஜாஜி, வ.உ.சி. போன்றோர்கள் காங்கிரஸில் இணைந்து ஒன்றாகப் பணியாற்றினார்கள். அந்த நேரத்தில் பெரியாரின் அரசியல்பணி இவ்வாறு தொடங்கியது.

புரட்சி மொழிகள்

 • மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு
 • பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி
 • மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்
 • விதியை நம்பி மதியை இழக்காதே.
 • மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது.
 • மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி.
 • பிறருக்கு தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு.
 • பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொது சொத்து.
 • பக்தி இல்லாவிட்டால் இழ்ப்பில்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் பாழ்.
 • தீண்டாமை ஒழிய வேண்டுமானால், சாதி ஒழிய வேண்டும்
 • கல்வி அறிவும், சுயமரியாதை எண்ணமும், பகுத்தறிவுத் தன்மையுமே தாழ்ந்து கிடக்கும் மக்களை உயர்த்தும்.
 • பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும், கட்டுப்பாடும், உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்.
 • ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழ வேண்டுமானால், அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் அவசியம்.
 • ஒழுக்கக் குறைவுக்கும் மூடநம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும் பயன்பட்டு விடக்கூடாது.
 • வாழ்க்கை அவனவன் வாழ்வதற்கு என்று மட்டும் கருதக் கூடாது மற்றவர்கள் நலனுக்கும் என்று கருத வேண்டும்.
 • ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
 • என்னைப் பொறுத்தமட்டில், நான் ஒழுக்கத்துடன் நடந்தால், உண்மையை ஒழிக்காமல் எதையும் நேர்மையுடன் கடைப்பிடித்தால், அதற்கு தனிசக்தி உண்டு என்பதை நம்புகிறவன்.
 • எனது சீர்திருத்தம் என்பதெல்லாம் பகுத்தறிவை கொண்டு ஆராச்சி செய்து, சரியென்று பட்டபடி நட என்பதேயாகும்.
 • மற்றவர்களிடம் பழகும் வித்த்தையும் ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே நன்றாக ஒருவன் கற்றுக் கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன் ஆவான்.

நினைவுகள்

தமிழ் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள். 95 ஆண்டுகள் வாந்தார் என்றாலும், அவரது ஒவ்வொரு சொல்லும் செயலும் நாட்டிற்காகவே என்று எண்ணிப் பணியாற்றியவர். அறியாமையையும், மூடப்பழக்கவழக்கங்களையும் எதிர்த்துப் போராடியவர். தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியவர். எதிர்ப்புக்கும், ஏளனத்திற்கும், மிரட்டலுக்கும், அடக்குமுறைக்கும் அஞ்சாமல், சமூக, பொது வாழ்விலும், பொருளாதாரத்திலும் மக்கள் யாவரும் சமத்துவமாய் வாழவேண்டும் என்பதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவர்.

ஈரோடு நகர்மன்றத் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் போன்ற பதவிகளை வகித்தவர். ‘குடியரசு’ ‘ரிவோல்ட்’ ‘புரட்சி’ ‘பகுத்தறிவு’ ‘விடுதலை’ ஆகிய இதழ்களை தோற்றுவித்தவர். ஜஸ்டிஸ் கட்சி, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரை திராவிடக் கழகம் என மாற்றி இயக்கமாக ஆக்கியவர். இந்தி எதிர்ப்பு, இன உணர்வு, பெண் கல்வி என இயக்கத்தின் கொள்கைக்காகவே வாழ்ந்து வரலாறானவர். வெளிநாட்டுப் பயணங்கள் பல மேற்கொண்டவர். கொண்ட கொள்கைக்காக பலமுறை சிறை சென்றவர். வைக்கம் வீர்ர். ஈரோட்டுச் சிங்களம், தன்மானத் தலைவர், பெரியார் என பல புகழ் மாலைகள் இவரைச் சேர்ந்து பெருமைப்பட்டன.

அவரின்நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லம் நினைவு இல்லமாகவும், கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் நினைவகமும் அமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பக்கங்கள்

கடந்த ஆயிரமாண்டில் வாழ்ந்த சமூகப் புரட்சியாளர்களில் எடுத்துக் காட்டாக விளங்கியவர் பெரியார் ஈரோடு வெங்கடநாய்க்கர் ராமசாமி அவர்கள் (1879-1973), ஜாதிமுறையை ஒழிக்கவும், பிறப்பின் அடிப்படையிலான வேறுபாடு அற்ற சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் அச்சமின்றி. அயர்வின்றி அவர் எடுத்த ஈடுஇணையற்ற முயற்சிகள் வரலாற்றில் தனி இடம் பெறத்தக்கன. ஒத்துழையாமை இயக்கத்தின் போது பெரும் தியாகங்கள் பலவற்றைச் செய்த அவர் 1920-23 ஆண்டுகளில் ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டார். சமூகத்தின் சமத்துவம் வேண்டி நவீன இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைதிப் போராட்டமான வைக்கம் போராட்டத்தின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்கு மகத்தானது. 1925-இல் சுயமரியாதை இயக்கத்தையும், 1944-இல் திராவிடர் கழகத்தையும் தோற்றுவித்த அவர், மனித மாண்பு, பகுத்தறிவு, பாலியல்சமத்துவம, சமூக நீதி போன்ற கொள்கைகளைப் பரப்பினார். அவர் மேற்கொண்ட மக்கள் தழுவிய போராட்டத்தின் காரணமாகவே சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க 1951-ஆம் ஆண்டில் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு முதன் முதலாகத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. எதனையும் முடிவெடுக்க அவர் தனது எழுத்துக்கள். பேச்சுகள் மூலம் மக்களுக்குக் கற்பித்தார். புத்துலகின் வருமுன் உரைப்பவர் அவர் என யுனெஸ்கோ நிறுவனம் மிகவும் பொருத்தமாக விவரித்துள்ளது. தனது சொத்துக்கள், மக்களின் நன்கொடைகள் எல்லாம் பொது அறக்கட்டளையாக்கி மக்களுக்கே தந்த வள்ளல் அவர்!

Thursday, November 26, 2009

ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்


இப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள்.

என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு.

தெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை ! அது ஆபாச உடையாம் !

அவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை ! இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது ! என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் ! அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள்.

நைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் !

எது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் ! அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி.

சூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர்.

முதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. “என்ன சமாச்சாரம்” என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது ! இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் ! முழுசும் மறைக்கும் மேலாடை ! லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் ! பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா ? 40 கசையடிகள் !

நாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம் கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள்.

லுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் ? காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது ? யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.

லுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். “சூடானின் பத்திரிகையாளர் லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்” என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார்.

இந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா ? அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா ? என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது.

அரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

லுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர்.

பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி !

இன்றைய ஸ்பெசல்

சிக்கன் பிரியாணி (செட்டிநாட்டு முறை)

தேவையான பொருட்கள்

 • 1. பாசுமதி அரிசி - 1 1/2 கப்
 • 2. கோழி - 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)
 • 3. வெங்காயம் - 1 (பெரிதாக நறுக்கியது)
 • 4. தக்காளி - 1 ( பொடியாக நறுக்கியது)
 • 5. பச்சை மிளகாய் - 5
 • 6. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
 • 7. தேங்காய் பால் - 1 1/2 கப்
 • 8. தண்ணீர் - 1 1/2 கப்
 • 9. கொத்தமல்லி, புதினா - 1/2 கப்
 • 10. தயிர் - 1/2 கப்
 • 11. எண்ணெய் - 100 மில்லி
 • 12. நெய் - 3 தேக்கரண்டி
 • 13. உப்பு
 • 14. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
 • 15. மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
 • 16. கரம் மசாலா தூள் - 1/4 தேகரண்டி
 • 17. பட்டை
 • 18. லவங்கம் - 5
 • 19. பிரியாணி இலை - 1
 • 20. ஏலக்காய் - 3

செய்முறை

 • கோழியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.
 • அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
 • ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
 • இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
 • பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
 • இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
 • இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி 3 நிமிடம் வைக்கவும்.
 • நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.
 • கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
 • கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி முக்கால் பாகம் வேக விடவும்.
 • இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுந்தீயில் 10 - 15 நிமிடம் தம் போடவும்.
 • சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.


செட்டிநாட்டு மட்டன்

பிரியாணி

தேவையான பொருட்கள்

 • சீரக சம்பா அரிசி - 3 கப்,
 • மட்டன் - 1/2 கி,
 • இஞ்சி - 50 கிராம்,
 • பூண்டு - 25 பல்,
 • பெரிய வெங்காயம் - 4,
 • சின்ன வெங்காயம் - 15,
 • தக்காளி - 3
 • பச்சை மிளகாய் - 4,
 • கிராம்பு - 4,
 • பட்டை - 4 துண்டு,
 • ஜாதிக்காய் - பாதி,
 • ஏலக்காய் - 4,
 • மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்,
 • கரம்மசாலா - 1/4 டீஸ்பூன்,
 • தேங்காய் - 1 மூடி,
 • முந்திரி - 10,
 • தயிர் - 1/2 கப்,
 • எலுமிச்சம்பழம் - 1 மூடி,
 • புதினா - 1 கட்டு,
 • மல்லி - 1 கட்டு,
 • நெய் - 1/2 கப்,
 • எண்ணெய் - 1/2 கப்.
 • --------------------------
 • தாளிக்கத்தேவையானவை
 • --------------------
 • கிராம்பு - 3,
 • பட்டை - 3 சிறிய துண்டு,
 • ஏலக்காய் - 3,
 • பிரிஞ்சி இலை - 1,
 • சோம்பு - 1 டீஸ்பூன்.

செய்முறை

 • மட்டனில் 1/4 கப் தயிர், மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன், கரம்மசாலா, உப்பு 1டீஸ்பூன் போட்டு 5 விசில் விட்டு வேகவைக்கவும்.
 • பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் இவற்றை நெய் விட்டு வறுத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.
 • பெரியவெங்காயம், சின்னவெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.
 • பச்சமிளகாயை வாயை கீறிக்கொள்ளவும்.
 • பூண்டை தனியாக அரைத்துக்கொள்ளவும்.
 • துருவிய தேங்காய், இஞ்சி, முந்திரி இவை மூன்றையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 கப் பால் எடுத்து வைக்கவும். ( இந்த பிரியாணியின் விசேஷமே தேங்காயும், இஞ்சியும் சேர்த்து அரைத்து பால் எடுப்பதுதான். இதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். இதனுடன் முந்திரி சேர்ப்பது ரிச்னஸ் க்காகத்தான். )
 • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய், எண்ணெய் இரண்டையும் சேர்த்து ஊற்றி காய விடவும்.
 • காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரிஞ்சி இலை, தாளிக்கவும்.
 • நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்க்கவும்.
 • வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அரைத்த பூண்டு விழுதை போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் வதக்கியதும், அரைத்த பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதிக்காய் விழுது, மிளகாய்தூள் போட்டு வதக்கவும்.
 • 5 நிமிடம் போல வதக்கி எண்ணெய் பிரிந்ததும் நறுக்கிய தக்காளியை போடவும்.
 • தக்காளி நன்றாக வதங்கி கூழானதும் தயிர்
 • சேர்க்கவும்.
 • இப்போது எடுத்து வைத்திருக்கும் தேங்காய்பால், மட்டன் வேக வைத்த தண்ணீர் இரண்டும் சேர்த்து 6 கப் அளந்து ஊற்றவும்.
 • உப்பு, புதினா, கொத்தமல்லி சேர்க்கவும்.
 • ஒரு கொதி வந்ததும் அரிசியை போடவும்.
 • பிரியாணி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழம் பிழியவும்.
 • பிரியாணி நன்றாக வெந்ததும் அப்படியே மூடி வைக்கவும்.