Monday, February 8, 2010

ஏ. ஆர். ரகுமான்

ஏ. ஆர். ரகுமான்

அ. இர. இரகுமான்
பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் ஏ.சே.திலீப்குமார்
பிறப்பு ஜனவரி 6 1967 (வயது 43)
தொடக்கம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வகை(கள்) திரைப்பட, மேடை இசை
தொழில்(கள்) இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர்
இசைக்கருவிகள் Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், percussion, ஏனைய
வலைத்தளம் அதிகாரபூர்வ இணையத் தளம்
அ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1967), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே. 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.
இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.
81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்[1].

பொருளடக்கம்

[மறை]

வாழ்க்கைக் குறிப்பு

ரகுமான் ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் இளையராஜா இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.
இவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.
முதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்டிங் ஸடுடியோவாக உள்ளது.

படைப்புகள்

திரைப்பட இசையமைப்புகள்

ஆண்டு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம்
1992 ரோஜா ரோஜா ரோஜா
1993 ஜென்டில்மேன் ஜென்டில்மேன் தி ஜென்டில்மேன்
1993 கிழக்குச்சீமையிலே


1993 புதிய முகம்


1993 திருடா திருடா டொங்கா டொங்கா ச்சோர் ச்சோர்
1993 உழவன்


1994 டூயட்


1994 காதலன்
ஹம்ஸே ஹே முக்காப்லா
1994 கருத்தம்மா


1994 மே மாதம்


1994 புதிய மன்னர்கள்


1994 வண்டிச்சோலை சின்னராசு


1994 பவித்ரா


1994
சூப்பர் போலீஸ்

1994
கேங் மாஸ்டர்

1995 பம்பாய் பம்பாய் பம்பாய்
1995 இந்திரா


1995 முத்து


1995 ரங்கீலா
ரங்கீலா
1996 இந்தியன் பாரதீயடு ஹிந்துஸ்தானி
1996 காதல் தேசம் பிரேம தேசம் துனியா தில்வாலோன் கீ
1996 லவ் பேர்ட்ஸ்
ஃபயர்
1996 மிஸ்டர் ரோமியோ


1997 இருவர்


1997 மின்சாரக் கனவு மெருப்பு கலலு சப்னே
1997 ரட்சகன் ரக்ஷடு

1997

தவுட்
1998 ஜீன்ஸ் ஜீன்ஸ் ஜீன்ஸ்
1998 உயிரே ஹிருதயாஞ்சலி தில் ஸே
1998

தோலி சஜா கே ரக்ஹ்னா
1998

கபி நா கபி
1999 முதல்வன் ஒக்கே ஓக்கடு நாயக்
1999 தாஜ் மஹால்


1999 சங்கமம்


1999 காதலர் தினம் பிரேமிகுலு ரோஜு

1999 ஜோடி


1999 தாளம்
தாள்
1999 என் சுவாசக்காற்றே


1999 படையப்பா


1999

1947 எர்த்
1999

தக்ஷக்
1999

புக்கார்
2000 அலைபாயுதே சகி சாத்தியா
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ப்ரியலு பிலிச்சிந்தி

2000 ரிதம் ரிதம்

2000 தெனாலி தெனாலி

2000

தில் ஹே தில் மே
2001 ஸ்டார்


2001 பார்த்தாலே பரவசம் பரவசம்

2001 அல்லி அர்ஜூனா


2001

சுபைதா
2001

ஒன் 2 கா 4
2001

லவ் யூ ஹமேஷா
2001

லகான்
2002 கன்னத்தில் முத்தமிட்டால் அம்ருதா

2002 பாபா


2002 காதல் வைரஸ்


2002

தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங்
2002

சாத்தியா
2003 உதயா


2003 பரசுராம்


2003 பாய்ஸ் பாய்ஸ்

2003


வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த்
2003 எனக்கு 20 உனக்கு 18 நீ மனசு நாக்கு தெலுசு

2003 கண்களால் கைது செய்


2003

தெஹ்ஜீப்
2004 ஆய்த எழுத்து யுவா யுவா
2004 நியூ நானி

2004 தேசம்
ஸ்வதேஸ்
2004

லகீர்
2004

மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ்
2004

தில் நே ஜிஸே அப்னா கஹா
2004

கிஸ்னா
2005

போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ
2005

மங்கள் பாண்டே - தி ரைஸிங்
2005 அ ஆ


2005

வாட்டர்
2006

ரங் தே பசந்தி
2006 சில்லுனு ஒரு காதல்


2006 வரலாறு


2007 குரு குரு குரு
2007

ப்ரோவோக்டு
2007 சிவாஜி


2007 அழகிய தமிழ் மகன்


2007


எலிசபெத்: தி கோல்டென் ஏஜ்
2008

ஜோதா அக்பர்
2008

ஜானே து யா ஜானே நா
2008

அடா : எ வே ஆப் லைப்
2008 சக்கரகட்டி


2008

யுவ்ராஜ்
2008

கஜினி
2008


ஸ்லம் டாக் மில்லியனியர்
2009

டில்லி 6
2009

ப்ளூ
2009


பாசேஜ்
2009


கபுள்ஸ் ரிட்ரீட்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா


  • குறிப்பு: "ஆண்டு", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.
பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:

திரைப்பட அல்லாத இசையமைப்புகள்

  • Return of the Thief of Baghdad (2003)
  • தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
  • செட் மீ ஃப்ரீ (1991)
  • வந்தே மாதரம் (1997)
  • ஜன கன மன (2000)
  • பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
  • இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
  • ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)
Tamilan

இவர் பெற்ற விருகள்

2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.
மொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான "ஸ்லம்டாக் மில்லினியர்" படத்திற்காக கோல்டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
சிகரமாக, 2010-ஆம் ஆண்டு பத்ம பூசண் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

2 comments:

  1. அருமையான பதிவு நன்றி
    இவன்
    http://www.tamilcinemablog.com/

    ReplyDelete
  2. very very useful blog.. i just shared it with my gmail friends list.. thanks


    anushka shetty

    ReplyDelete