Saturday, January 23, 2010

திடீர் நினைவகம்

திடீர் நினைவகம்

திடீர் நினைவகம் (flash memory) என்பது ஒரு வகை படிப்பு நினைவகம் (ROM). ஒரு பதிமுறைமையில் திடீர் நினைவகத்தில் தொடக்க நிரற்றொடரை (bootup code) பதிந்துக் கொள்ளப்படுகிறது. இவ்வகை நினைவகங்கள் புகைப்படக்கருவிகள், அலைபேசிகள், சலவைப்பெட்டிகள், சீருந்து பதிமின்னணுவில் (car embedded electronics), பொதுவாக அனைத்து பதிபயனகங்களில் (embedded applications) பிரபலமாகிவிட்டது.
இரண்டு வகைகளான திடீர்நினைவகச் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம். முதல் வகை இல்லல்லது திடீர்நினைவகம் (NOR flash). இதில் நிரற்றொடர் செயற்பாடு (code execution) விரைவானது. ஆனால் அழிப்பு மந்தமானது. கடந்த ஆண்டுகளாக இந்த வகை திடீர் நினைவகம் பிரபலமாக இருந்து வந்தது. அண்மைக் காலங்களாக இல்லும்மை திடீர்நினைவகம் (NAND) மிகவும் புழக்கத்தில் பயன்பட்டு வருகிறது. இவ்வகை திடீர்நினைவகம் இல்லும்மை வகையை விட அதிகக் கொள்ளளவில் கிடைக்கிறது.

No comments:

Post a Comment